கிம் ஆம்
கிம் ஆம் (கொரிய மொழி: 김암) எட்டாம் நூற்றாண்டுகொரிய வானியலாளர்; கணியவியலாளர்; படைமேலர். இவர் சில்லா அரசு காலத்தில் யின்-யாங் மற்போர் வல்லுனராகவும் மாயவித்தை செய்பவராகவும் விளங்கினார்.
வாழ்க்கை
[தொகு]இவர் படைத்தளபதி கிம் யூழ்சினின் பேரன் ஆவார்.[1][2]
கிம் ஆம் யின்-யாங் மற்போரைச் சீன நாட்டு சாங்கன் மாகாணத்தில் பயின்றார். இம்மற்போர் ஒரு தொன்ம மற்போர் வகையாகும்.[2][3] இவர் பொருட்கள் உருமாறும் கோட்பாடு (Tungap ipsong pop) எனும் தாவோயியப் படைப்பை எழுதினார். இது சண்டைக்கலையின் தொன்ம உருவு (Tungkapbop) என்றும் தண்டுகளைத் தவிர்க்கும் கோட்பாடு (Tun'gap ipsong pop) என்றும் அறியப்படுகின்றது.[2][3][4] இவரது புங்-சு-சோல்.(Pung-su-sol) எனும் புவியியல் கோட்பாடுதான் கொரிய அறிவியலில் முதலில் பதிவாகிய புவியியல் மேற்கோளாகும்.[5] கி.பி 769 இன் ஓர் பழங்கதைப்படி இவர் ஓர் மந்திர ஓதலால் புயலை உருவாக்கி பஞ்சத்தை உருவாக்கவிருந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் கொன்றுள்ளார். இதில் இருந்து இவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினரைப் போலவே இவரும் மாயவித்தை செய்பவராக இருந்துள்ளார் எனத் தெரியவருகிறது.[1]
சில்லா அரசு இவருக்கு அலுவற்பணிகளைத் தந்துள்ளது. இப்பணியின் பெயர் "அண்ட நிகழ்வு வல்லுனர்",[3] அல்லது "அறிவியல், வானியல் பேரறிஞர்" (Sachon Paksa)[2] or "வானியல் மாபெரும் பேராசிரியர்" எனப் பலவாறாக மொழிபெயர்க்கப்படுகிறது; அவரது காலத்தில் இருந்த வானியல் பேராசிரியர் எவருக்கும் தரப்படாத ’மாபெரும்’ எனும் அடைமொழி இவருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.[1]
இவர் 797 இல் யப்பானின் நாரா மன்றத்துக்கு தூதுவரக அனுப்பப்பட்டுள்ளார், அங்கு இவர் யப்பான் பேரரசரான கோனினின் பெருமதிப்பைப் பெற்றுள்ளார்.[2] (ஆ-டோ கியூயிi)என்ற யப்பான் பயண நூலை எழுதிய கிம் ஆம் இவராகத்தான் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது.[6][7]
இவர் போர்ப்படை தளபதி மட்டுமன்றி, போர்க்கோட்பாட்டாளரும் ஆவார். இவர் பயேகாங் படையணிக்கு . "ஆறுவரிசை அணிவகுப்புமுறை. "யில் பயிற்சியளித்து வழிநடத்தினார்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Hanʼguk Yŏnʼguwŏn (Seoul, Korea) (1977). Journal of Social Sciences and Humanities. Korean Research Center. p. 75.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 The Journal of Modern Korean Studies. Mary Washington College. 1987. p. 124.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Ki-baek Yi (1984). A New History of Korea. Harvard University Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-61576-2.
- ↑ John Stewart Bowman (2013). Columbia Chronologies of Asian History and Culture. Columbia University Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50004-3.
- ↑ Korea: Its Land, People, and Culture of All Ages. Hakwon-Sa. 1963. p. 467.
- ↑ Homer Bezaleel Hulbert (1909). The Passing of Korea. Doubleday, Page & Company. p. 310.
- ↑ Korea Review. Methodist Publishing House. 1902. p. 290.